திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: கனிமொழி உறுதி

மதுரை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி இன்று மதுரையில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து சமுதாய சங்க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்; திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழுக்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். மேலும் கால்நடைகள் மேம்பாட்டிற்காக தனி நலவாரியம் அமைக்கப்படும் என்றும் மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.

Related Stories:

>