×

சேரம்பாடியில் சதுப்பு நிலத்தில் ஆட்கொல்லி யானை உள்ளதால் கும்கிகளை கொண்டு பிடிப்பதில் கால தாமதம்

ஊட்டி : கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரை சங்கர் என்ற உடைந்த கொம்பன் யானை மிதித்து கொன்றது. இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் அப்பேதே முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், யானை கேரள வனப்பகுதிக்குள் சென்றதால், அதனை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்த யானை தமிழக எல்லைக்குள் வந்துள்ளது. ஆனால், ஒரு யானை கூட்டத்துடன் சுற்றித்திரிவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, விஜய் மற்றும் சுஜய் உள்ளிட்ட 6 கும்கி யானைகளை அங்கு கொண்டுச் சென்று யானையை பிடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், ஒரு வாரமாக வனத்துறையினரின் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. மேலும், அந்த யானை ஒரு யானை கூட்டத்துடனுன், அந்த கூட்டத்தில் ஒரு குட்டி யானை உள்ளதாலும் பிடிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, அந்த யானை சதுப்பு நிலத்திற்குள்ளேேய உள்ளதால், அங்கு கும்கி யானைகளை கொண்டுச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆட்கொல்லி யானையான சங்கர் யானையை பிடிக்க தொடர்ந்து தாமதம் ஏறபட்டுள்ளது.

ஆட்கொல்லி யானையை கூட்டத்தில் இருந்து பிரித்து, பின்னர் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags : Serampore ,swamp , Ooty: Three people, including a father and son, were trampled by a broken horned elephant named Shankar last December in the Cherampadi area near Kudalur
× RELATED இந்தியாவின் ஒருபகுதி ஆக்கிரமிப்பு...