×

ஊட்டி என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

ஊட்டி : ஊட்டி என்சிஎம்எஸ்., பார்க்கிங்தளம் சீரமைக்கும் பணிகள் இரு ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லை. தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் வழித்தடத்தில் என்சிஎம்எஸ்.,(கூட்டுறவு நிறுவனம்) சொந்தமான பார்க்கிங் தளம் மட்டுமே உள்ளது.

இந்த பார்க்கிங் தளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிைலயில், கடந்த இரு ஆண்டுக்கு முன் அந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் முறையாக பார்க்கிங் தளத்தை சீரமைக்கவில்லை. சீரமைப்பு பணிகளை பாதியில் விட்டுச் சென்றனர்.
இதனால், தொடர்ந்து அங்கு வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பார்க்கிங் தளம் அமைக்கும் பணிகளும் பாதியிலேயே நின்றது. இந்நிலையில், இந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனால், தற்போது மீண்டும் பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பாதியில் நிறுத்தப்பட்ட இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் மீண்டும் துவங்கி தற்போது நடந்து வருகிறது. எனினும், மீண்டும் இப்பணிகளை பாதியில் நிறுத்தி விடாமல் முழுமையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty NCMS. , Ooty: Ooty NCMS., Parking site renovation work has resumed after two years.
× RELATED ஊட்டி என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணி மீண்டும் துவக்கம்