ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகரிப்பு பெரணி செடிகள் பாதுகாப்பில் மும்முரம்

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பெரணி இல்லத்தில் செடிகள் காய்ந்து விடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வெளி நாடுகளில் காணப்படும் மலர்கள், மலர்கள், செடிகள், தாவரங்கள், கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகள் அதிகளவு காணப்படுகிறது.

குறிப்பாக, பல்வேறு வகையான பெரணி செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, பல்வேறு தாவரவயியல் ஆராய்ச்சி மாணவர்கள் பார்வையிட்டும், ஆய்வு செய்தும் செல்கின்றனர். இந்நிலையில், நீலகிரியில் தற்போது பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இதனால், பெரணி செடிகளும் பனியால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நாள் தோறும் பெரணி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளை தாவரவியல் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தொட்டிகளில் நடவு பணிகள், மலர் செடிகள் பனியில் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு முடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Related Stories:

>