×

திருநள்ளாறு கோயில் யானை ப்ரக்ருதி புத்துணர்ச்சி முகாமுக்கு சென்றது

காரைக்கால் : காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் பிரணாம்பிகைஎன்றழைக்கப்படும் ப்ரக்ருதி என்ற என்ற பெண் யானை உள்ளது. ஆண்டுதோறும் இந்த யானை புத்துணர்ச்சி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்படும். திருநள்ளாறுக்கு சனீஸ்வரபகவானை தரிசிக்க வரும் பக்தர்களை வாயிலிலே நின்று ஆசீர்வாதம் செய்து அனுப்பும் இந்த யானை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெறவுள்ள புத்துணர்ச்சி முகாமுக்கு நேற்று புறப்பட்டு சென்றது.

முன்னதாக காலை 6.30 மணியளவில் யானைக்கு கஜபூஜை நடைபெற்றது. காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையினை கோயிலின் பிரதான அர்ச்சகர் ராஜாசாமிநாதகுருக்கள் செய்தார். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூஜைக்கு பின்னர் கோயில் யானை பிரக்ருதி புத்துணர்ச்சி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. யானை திரும்பி வருவதற்குள் யானை தங்குமிடத்தை விரிவுபடுத்தி அமைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Tags : Thirunallar ,Prakruti Refreshment Camp , Karaikal: Located at Thirunallar near Karaikal at the ர்பDarbaranyeswara Swamy Temple
× RELATED பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு...