×

காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்-ஜெம்புநாதபுரத்தில் பரபரப்பு

முசிறி : திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாதம்பட்டியை சேர்ந்த மணி என்பவரது மகன் பிரசாந்த் (28). வெல்டர். இவர் கடந்த 2012ம் ஆண்டு தொட்டியம் பகுதியில் மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணின் சகோதரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரசாந்துக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து பிரசாந்த் சென்னை ஐகோர்ட்டில் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென மேல்முறையீடு செய்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ராக்கம்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மைனர் மகளை திருமணம் செய்த பிரசாந்த் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், அப்பெண் மீண்டும் கர்ப்பிணியாக உள்ளதால் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவமனையில் அப்பெண்ணின் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். இதற்காக பிரசாந்த் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தனது மகளை பிரசாந்த் கடத்திச் சென்று வைத்திருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மகளின் பெற்றோர்கள் ஜெம்புநாதாபுரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போலீசார் பிரசாந்தின் உறவினர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் திருப்பூரில் வசித்த பிரசாந்த் அவரது மனைவி மகன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் பிரசாந்தின் மனைவி தற்போது வரை மைனர் என்பதும் 18 வயது நிறைவடையவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் பிரசாந்த்தை போக்சோவில் கைது செய்ய போலீசார் முடிவெடுத்ததாக தெரிகிறது.

இதை அறிந்த பிரசாந்த் குழந்தை அழுவதாக கூறி போக்கு காட்டி மனைவியையும், குழந்தையையும் மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நம்மை வாழ விடமாட்டார்கள் ஆதலால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என மனைவியிடம் கூறியுள்ளார். மனைவி எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிரசாந்த் காவல் நிலைய மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டாராம். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதையடுத்து ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு மத்திய மண்டல ஐஜி ஜெயராம், டிஐஜி ஆனி விஜயா, எஸ்பி பொறுப்பு செந்தில்குமார் ஆகியோர் வந்து சம்பவம் குறித்து நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க அதிகளவில் போலீசார், வஜ்ரா வாகனம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் நேற்று மதியம் பிரசாந்தின் உறவினர்கள் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பிரசாந்தின் மனைவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பிரசாந்தின் மனைவியை போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் மாவட்ட நீதிபதி மற்றும் துறையூர் நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு ஆஜர் படுத்த வேண்டும்.
பிரசாந்த் மனைவி பாதுகாப்புடன் உள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நீதிபதி விசாரணை

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசாந்த் உடல் பிரேத பரிசோதனைக்கு முன் துறையூர் நீதிபதி புவியரசு நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த பிரசாந்த் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பிரசாந்த் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆயுதப்படைக்கு எஸ்ஐ மாற்றம்

ஜெம்புநாதபுரத்தில் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பிரசாந்தின் வழக்கை விசாரணை செய்து வந்த எஸ்ஐ முகமது ரபீக்யை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : suicide ,terrace ,police station , Musiri: Prasanth (28) is the son of Mani from Dadampatti near Musiri in Trichy district. Welder. This is the 2012 tank
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து