ஜெயலலிதாவையே விஞ்சும் அளவிற்கு சசிகலாவுக்கு வரவேற்பு.. ராட்சத மாலை, பூமழை, ஆடல் பாடலுடன் தொண்டர்கள் உற்சாகம்!!

சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் இன்று சென்னை  வருகிறார். பெங்களூருவிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா தற்போது கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து சென்னை புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு 6 அடி உயர வேல் வழங்கப்பட்டது. ஓசூர் அத்திப்பள்ளியில் சசிகலாவுக்கு பிரம்மாண்ட மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்றனர்.தமிழக எல்லையில் செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தொண்டர்கள் வரவேற்றனர். மேலும் ஆரத்தி தட்டுகளுடன் பெண்களும் திரண்டனர். ஜூஜூவாடி பகுதியில் பெண்கள் பால்குடம் எடுத்தனர். வழிநெடுகிலும் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டன. தமிழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அமமுக தொண்டர்களும் திரண்டனர்.

தொடர்ந்து, ஓசூர் அருகே உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார் சசிகலா. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் பிரகாரத்தை சுற்றிய அவர், டிடிவி தினகரன், இளவரசியுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது சசிகலா தோளில் அதிமுக துண்டு போட்டிருந்தது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சசிகலா தமிழக எல்லைக்குள் நுழையும்போது வானத்தில் இருந்து அவருக்கு பூ தூவ அமமுகவின் முடிவெடுத்தனர். ஹெலிகாப்டரிலிருந்து பூ தூவர் கலெக்டரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், ட்ரோன் மூலமாக வானத்தில் இருந்து சசிகலாவுக்கு பூ மழை பொழிந்து தொண்டர்கள் மகிழ்ந்தனர்.

Related Stories:

>