விவசாயிகளுடன் மோதிய அரசு வென்றதாக வரலாறு இல்லை!: விவசாயிகள் கைகளை மடக்கிவிட்டால், யாரும் பிழைக்க முடியாது...ப.சிதம்பரம் பேச்சு..!!

சிவகங்கை: விவசாயிகளுடன் மோதிய அரசு வென்றதாக வரலாறு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாஜகவுக்கு கட்டுப்பட்டு அதிமுக அரசு பொம்மைபோல் ஆடுவதாக விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட தெரிவிக்க மனமில்லாதவர் பிரதமர் நரேந்திர மோடி என விமர்சனம் செய்தார். மேலும் விவசாயிகள் கையை மடக்கி விட்டால் சன்னியாசிகள், சாமியார்கள் கூட பிழைக்க முடியாது.

விவசாயிகளுடன் போராடி ஒரு அரசு வென்றதாக வரலாறே இல்லை. விவசாயிகளுடன் இந்த அரசு மோதுகிறது. நிச்சயம் இதில் விவசாயிகள் தான் வெற்றிபெறுவார்கள் என ப.சிதம்பரம் குறிப்பிட்ட அவர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக மானாமதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டத்திலும் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். ஊழலுக்காக கைதாகி சிறைக்கு சென்று அபராதம் கட்டியவர்களின் ஆட்சி நல்லாட்சி என கூறுவது கேலிக்கூத்தாக இருக்கிறது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: