×

கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர் : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : இந்தியா புதிய வாய்ப்புகளுக்கான பூமி, பல அரிய வாய்ப்புகள் நமக்குக் காத்திருக்கின்றன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது.

*இந்தியாவின் இலக்குகளை படம்பிடித்து காட்டியது ஜனாதிபதியின் உரை.ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

*குடியரசுத் தலைவர் உரையை எதிர்கட்சியினர் புறக்கணித்திருக்க கூடாது.குடியரசு தலைவரின் உரையை கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சனம் செய்கின்றனர். குடியரசு தலைவர் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது

*நாடு வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. .

*இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில் நாம் நுழைய இருக்கிறோம். இந்தியாவின் வாயிலில் ஏரளாமான வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

*இந்தியாவிடம் இருந்து உலகமே ஏராளமாக எதிர்பார்க்கும் நிலையில், தற்சார்பை நோக்கி இந்தியா நடைபோடுகிறது.

*நாம் முன் பின் பார்த்திராத எதிரியான கொரோனா வைரஸால் இந்தியா பெரும் நெருக்கடியை சந்தித்தது.பிற நாடுகளில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட இந்தியா உதவி செய்து வருகிறது. அனைத்து இடர்பாடுகளையும் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

*இந்தியா தற்போது வாய்ப்புகளுக்கான நாடாக மாறியுள்ளது. இந்தியாவில் நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

*உலகமே தற்போது இந்தியா முன்னெடுத்து இருக்கக் கூடிய தீர்வுகளை கண்டறிய கவனம் செலுத்துகிறது. உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகிறது.உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று விரைவாக கட்டுப்படுத்தப்படுகிறது.

*இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்க மாட்டோம்.

*மனித இனம் இப்படி ஒரு சிக்கலான நேரத்தை சந்திக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

*அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கொரோனாவுக்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். ஏழைகள் கூட நாட்டின் ஒற்றுமைக்காக வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள்.

*இந்தியாவில் வறுமையை அறவே ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது.

*வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.வேளாண் சட்டம் தொடர்பான விவாதத்தில் சுமார் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர்.

Tags : lighting event ,speech ,Modi ,Corona , Prime Minister Modi, speech, states
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...