×

தமிழ் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் நவீன திருமணம்.: திருக்குறளின் முப்பால் உரைகளையும் எடுத்து கூறி வாழ்த்துக்கள்

நாகர்கோவில்: தமிழ் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் பறை, களரி, சிலம்பம் உட்பட பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் திருக்குறளை எடுத்து கூறி நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜனுக்கும், பிரீத்திக்கும் திருமணம் செய்து வைக்க குடும்ப பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த திருமணத்தை தமிழ் கலாச்சார முறைப்படி நடத்துவது என இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யாமல் தமிழர்களின் பாரம்பரியமான பறை, களரி, சிலம்பம் மற்றும் வர்மக்கலை உள்ளிறவைகளுடன் திருமணம் வித்தியாசமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.  

ஜாதி மாதங்களுக்கு ஆப்பர்ப்பட்டு திருக்குறளின் முப்பால் உரைகளும் திருமணத்தில் எடுத்து கூறப்பட்டது. நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேற்கத்திய பாணியை பின்பற்றாமல் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றிய திருமணத்தில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


Tags : Modern Marriage in Respect for Tamil Culture: Congratulations on taking Thirukkural's three-part speech
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...