பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டிய வேறு காரில் பயணிக்கும் சசிகலா!: எல்லையில் அமமுக-வினர் உற்சாக வரவேற்பு..!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி கட்டிய வேறு காரில் வரும் சசிகலாவுக்கு எல்லையில் அமமுக-வினர் வரவேற்பு அளித்தனர். பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா தற்போது தமிழக எல்லை பகுதியை வந்தடைந்திருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதி அருகே அதிமுக கொடியுடன் வந்து கொண்டிருந்த நிலையில், சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. தொடர்ந்து, கொடி அகற்றப்பட்டு வேறு ஒரு காரில் அதிமுக கொடியுடன் சசிகலா தமிழக எல்லையை வந்தடைந்தார். அவருக்கு அமமுக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக எல்லையில் ஆங்காங்கே முகாமிட்டு தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். கர்நாடக மாநில எல்லையில் இருக்கக்கூடிய ஆஞ்சிநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சசிகலா வேறு வாகனத்திற்கு மாறியிருக்கிறார். சசிகலாவின் வாகனத்தை தொடர்ந்து 5 வாகனங்கள் மட்டுமே வரவேண்டும்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். தொடர்ச்சியாக இந்த பகுதியில் இருந்து அவர் செல்லக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரை 13 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிப்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சசிகலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 31ம் தேதி காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் பெங்களூரிலிருந்து சென்னை புறப்பட்டார். 

Related Stories:

>