ஆமாம் சாமி போடும் அரசு நமக்கு தேவையில்லை: மணி, மதுரவாயல்

அத்தியவாசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால், டீக்கடையில் கூலி வேலை செய்யும் என்னை போன்றவர்கள் குடும்பம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் பாமர மக்கள் வாங்கக் கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பார்கள் என்று பார்த்தால், மொத்தமாக இறக்குமதி செய்யும் பொருட்களின் விலையை தான் குறைத்துள்ளனர். எனவே, அவர்கள் குறைவான விலையில் இறக்குமதி செய்து எங்களை போன்ற பாமர மக்களிடம் அதிக விலைக்கு தான் விற்பார்கள். இந்த பட்ஜெட்டை தமிழக அரசு எதிர்க்கும் என்று பார்த்தால் அவர்கள் சிறப்பான பட்ெஜட் என்று வரவேற்கின்றனர். மத்திய அரசு என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் சாமி போடும் அரசாக தான் உள்ளது. எனவே மத்திய அரசை எதிர்த்து துணிந்து தவறு செய்யும் பட்சத்தில் அதை எதிர்க்கக்கூடிய அரசாக அமைந்தால் தான் நன்றாக இருக்கும்.

மேலும் மக்களவை, மாநிலங்களவையில் தற்போதுள்ள அரசுக்கு அதிக பெரும்பான்மை உள்ளதால் எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் நிறைவேற்றி விடலாம் என்ற தைரியத்தில் மக்களுக்கு விரோதமான, மக்கள் எதிர்க்கக்கூடிய திட்டங்கள், சட்டங்களை கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் நிறைய பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். இதில் 10க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களை தனியாருக்கு விற்றுள்ளனர். எனவே இனி படித்தவர்கள் வேலையில்லாமல் டீ, ஓட்டல் கடை என்று வேலைக்கு போக வேண்டிய நிலையை உருவாக்கி விட்டனர். இனியும் மீதமுள்ள வருடங்களில் எதையெல்லாம் விற்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும்.

கூட்டணியே முடிவாகாத நிலையில் திருவையாறு தொகுதிக்கு பாஜ வேட்பாளர் அறிவிப்பு: அதிமுக கடும் அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு எத்தனை சீட் என இதுவரை முடிவாகவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிக்கு திடீரென பாஜ வேட்பாளராக பூண்டி.வெங்கடேசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். திருக்காட்டுப்பள்ளியில் பாஜ சார்பில் நேற்றுமுன்தினம் இரவு பிரசாரத்தை மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன் துவக்கி வைத்து பேசியதாவது: இடைத்தரகர்களால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காக்கவே விவசாய திருத்த சட்டங்களை மோடி கொண்டு வந்தார். பயிர்பாதுகாப்பு திட்டம் அளித்தது பாஜக அரசு. பாஜக ஆட்சியில் ஒரு விவசாயி கூட பாதிக்கப்படவில்லை.

கொரோனா காலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.500 வழங்கியது பாஜக அரசு. 3 மாதம் கேஸ் இலவசம். திருவையாறு தொகுதி எம்எல்ஏவாக பூண்டி.வெங்கடேசன் வந்தால் தான் இதுபோன்ற மக்கள் சேவை தொடரும் என்றார். பூண்டி. வெங்கடேசன் பாஜவில் திருவையாறு தொகுதி பொறுப்பாளராக உள்ளார். அவர் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று ராம.சீனிவாசன் பேசியிருப்பதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் வேட்பாளர் என்பதை அவர் தெளிவாக தெரிவித்திருப்பதால் அதிமுகவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>