செவிலிமேட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க புதிய கிடங்கு: கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்திட புதியதாக கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ள பாதுகாப்பு கிடங்கினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் பொதுப்பணித் துறையின் சார்பில் தேர்தலுக்காக வாக்குசாவடிகளில் வாக்களிக்க பயன்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்திட புதியதாக பாதுகாப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1949 சதுர மீட்டர் முழு பரப்பளவில் கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

இதில் வாக்கு சேகரிக்கும் இயந்திரம், வாக்களிப்பதை உறுதி செய்திடும் இயந்திரங்கள், வாக்கு கட்டுபாட்டு இயந்திரம் ஆகியவற்றை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வைப்பதற்காக தனித்தனியே தரை மற்றும் இரண்டு தளங்களுடன் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அரசு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>