×

ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழியில் மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி விருப்பம்

தேக்கியாஜூலி:  ‘ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியில் கல்வி கற்பிக்கும் ஒரு மருத்துவ கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க வேண்டும்,’ என்ற கனவு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், தேகியாஜூலியில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தொடர்ந்து மாநில நெடுங்சாலைகள் மற்றும் முக்கிய மாவட்ட சாலைகளை மேம்படுத்தும் ரூ.8210கோடி மதிப்புள்ள “அசாம் மாலா” திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும், பிஸ்வாந்த்  மற்றும் சாரைடியோ மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு மாநிலங்களிலும் தாய் மொழியில் கல்வி கற்பிக்கும் மருத்துவ கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை தொடங்க வேண்டும் என்பதே எனது கனவாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு பின் அசாமில் தாய் மொழியில் கல்வி வழங்கும் இதுபோன்ற மருத்துவ கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும். இந்த மருத்துவ கல்லூரி மூலமாக மருத்துவ சேவை மேம்படும். எளிதில் சென்றடைய வசதியில்லா பகுதிகளிலும் மருத்துவர்கள் மக்களை சந்திக்கவும், அவர்களின் பிரச்னைகளை தாய் மொழியில் புரிந்து கொள்ளவும் ஏதுவாக அமையும்’’ என்றார்.

* மம்தா கொடூர ஆட்சி
அசாம் நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு வங்கத்துக்கு வந்த மோடி, ஹால்டியாவில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘மேற்கு வங்க மக்கள் மம்தாவை (அன்பு) எதிர்பார்த்தனர். ஆனால், பொதுமக்களின் நம்பிக்கையை அழித்து நிர்மம்தாவாக (குரூரமானவராக) அவர் (மம்தா) ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் இங்கு பல சீரழிவை உண்டாக்கி விட்டார். அரசியல் காழ்ப்புணர்வால், மத்திய அரசின் பல சிறப்பான திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளார். ‘பாரத் மாதாகி ஜே’ என்ற கோஷமிட்டால் கோபப்படுகிறார். ஆனால், இந்தியா பற்றி அவதூறு பரப்பினால் அமைதி காக்கிறார். மம்தாவை ஆட்சியை விட்டு அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்,’’ என்றார்.

Tags : colleges ,state ,Modi , Medical colleges in the mother tongue in every state: Prime Minister Modi's wish
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...