×

சாமானியர்களை புறந்தள்ளி, பொதுத்துறை நிறுவனங்களை விற்று தேர்தல் மாநிலங்களுக்கு சலுகை தரவா மத்திய பட்ஜெட்: கார்ப்ரேட்டுகளை திருப்திப்படுத்த தயாரானதா?

பட்ஜெட் என்றாலே, வருமான வரி சலுகை கிடைக்குமா, வருமான உச்சவரம்பு உயருமா என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், சாமானிய, நடுத்தர மக்களின் இந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பு கூட பூர்த்தி செய்யப்படவில்லை. வழக்கம்போல் ஏமாற்றம்தான்.  தமிழகம், புதுவை, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களும், சலுகைகளும் அறிவித்துள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்த பொருளாதாரமும் அடியோடு விழுந்து விட்டது.

பெரும்பாலான தொழில்துறைகள் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளவே இல்லை. அவற்றை மீட்டுக் கொண்டுவர போதுமான அளவுக்கு அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இந்த பட்ஜெட் அறிவிப்புகள் இடம்பெற்றன. விவசாய துறையை அரசு கண்டு கொள்ளவே இல்லை. விவசாயத்துறைக்கான பிரதான திட்டங்களாக கூறும் பசல் பீமா திட்டம், கிசான் சம்மான் திட்டங்களுக்கு கூட போதுமான அறிவிப்புகள் இல்லை. விவசாய துறைக்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது நடப்பு நிதியாண்டை விட சுமார் 8 சதவீதம் குறைவுதான் என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

இப்படி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள், விவசாயிகள் நலனுக்காக பெரிய அளவில் எந்த ஒதுக்கீடும் செய்யாமல், பொதுத்துறை நிறுவனங்களை விற்று வருவாய் ஈட்டுவதும், தனியார் மயம் ஆக்குவதும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டில் இருந்து மத்திய அரசு மாறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ஏற்கெனவே ரிசர்வ் வங்கியில் இருந்து பல லட்சம் கோடி உபரி நிதியை திரட்டிய மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று மேன்மேலும் நிதி திரட்ட நினைப்பதும், நாடு முழுவதுக்குமான பட்ஜெட்டை தேர்தல் மாநிலங்களுக்கு மட்டும் செயல்படுத்தி வாக்குகளை பெற முயற்சிப்பதும் ஒட்டு மொத்த நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்து நான்கு கோண அலசல் இங்கே:

Tags : Corporates , Federal Budget: Ready to Satisfy Corporates?
× RELATED ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளைக்...