×

சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து அவதூறு: கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக புகார்

சென்னை: அமைச்சர் சி.வி.சண்முகம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வரும் யூ-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரை களங்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து தவறாக பேசியதாக சிலர் பொய்களை பரப்பி வருகின்றனர்.

தவறான நோக்கத்தோடு அரசியல் எதிரிகள் இதுபோன்று பரப்பி கொண்டு இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி. சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு ‘நாரதர் மீடியா’ என்ற யூ-டியூப் சேனல் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. சி.வி.சண்முகம் எந்த இடத்திலும் அப்படி ஒரு கருத்தை தெரிவிக்க வில்லை. எனவே, சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனலை தடை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : CV Shanmugam ,AIADMK , Minister CV Shanmugam, slander, AIADMK, complaint
× RELATED ‘பாஜ நடத்தியது ரோடு ஷோ அல்ல; இறுதி...