×

சீட் கிடைத்தால் சந்தோஷம் தான்: நடிகை குஷ்பு பேட்டி

பாஜவில் உங்களுக்கு மரியாதை எப்படி உள்ளது?. மக்களுக்கு எதிரான திட்டம் என்றால் குரல் கொடுப்பீர்கள். இப்போது அப்படி குரல் எழுப்ப முடிகிறதா? தப்பு எங்கே நடக்கிறதோ அங்கே குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன். தப்பு நடக்கும் இடத்தில் குரல் கொடுப்பது என்பது அடிப்படை சுபாவம். அதை யாராலும் மாற்ற முடியாது. நான் எப்படி இருக்கின்ேறனோ அப்படி தான் இருக்க போகிறேன். அதில் எந்த மாற்றமும் இருக்க போவது இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. எதிர்க்கட்சி தரப்பில் இருக்கும் போது தப்பு அதிகமாக தெரிகிறது. 6 வருடமாக தப்பு கண்டுப்பிடிக்கவே ஒரு கூட்டம் போட்டோம். இப்போது இங்கே வந்த பிறகு தான் எவ்வளவு நியாயமான விஷயம் நடக்கிறது என்று தெரிய வருகிறது. தப்பு எங்கே நடக்கிறது. தப்பு நடக்கும் போது கண்டிப்பாக குரல் கொடுப்ேபன்.

சட்டசபையில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறீர்கள்? எந்த தொகுதியில் போட்டியிட போகிறீர்கள் என்ற கேள்வியை 2011ல் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறேன். இரண்டு சட்டசபை தேர்தல், இரண்டு நாடாளுமன்ற தேர்தல் என்று 4 தேர்தல் பார்த்து விட்டேன். ஒவ்வொரு தடவையும் பத்திரிகையாளர்களே இந்த தொகுதியில் நிற்க போகிறேன். அந்த தொகுதியில் நிற்க போகிறேன். தொகுதி கொடுக்கப்படவில்லை என்பதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறேன். நான் அந்த தொகுதியில் நிற்பேனா, இந்த தொகுதியில் நிற்பேனா என்று போட்டு கொண்டு இருக்கிறார்கள். என்னை வேட்பாளராக அறிவிப்பார்களா என்று எனக்கு ஒன்னுமே தெரியாது. தெரிந்ததற்கு பிறகு தான் எதையும் சொல்ல முடியும். சீட் கிடைக்கும் என்பதால் நான் கட்சி மாறி வரவில்லை. சீட் கொடுத்தால் சந்தோஷம். கட்சி ஜெயிக்க வேண்டும். யாராவது தனிப்பட்ட முறையில் ஜெயிக்க போவதில்லை. கட்சிக்காக தான் உழைக்கிறோம். கட்சி தான் ஜெயிக்க வேண்டும்.

வந்தவுடன் பல இடங்களில் பிரசாரம் செய்தீர்கள். இப்போது தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறதே? என்ன காரணம்? நான் இப்போதும் பிரசாரம் செய்து கொண்டு தான் இருக்கிறேன். பத்திரிகையில் முகம் காட்டுவதற்கு ஒரு பிரசாரமா? நாங்க பூத் ஸ்ட்ராங் பண்றோம். பத்திரிகையில் சொல்லி விட்டு, விளம்பரம்படுத்தி விட்டு பூத் ஸ்ட்ராங்க் பண்ண முடியாது. எங்களுடைய வேலை தலைவர்களை சந்திப்பது, மக்களை சந்திப்பது, பூத் கமிட்டியில் யார் யார் இருக்கிறார்கள், காரியகர்தாக்கள் யார் யார் இருக்கிறார்கள், நிர்வாகிகள் யார் யார் இருக்கிறார்கள், அவங்களை எல்லாம் சந்திப்பது தான் எங்களது வேலை. தினமும் எங்களது மீட்டிங் நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாவற்றையும் விளம்பரம் படுத்தி பண்ணுவது என்பது கிடையாது. இதுவரைக்கும் ஏசி ரூமில் இருந்து கிட்டு தான் எனது வேலை இருந்தது. இப்போது தான் முதல் முறையாக கீழே இறங்கி வேலை பார்க்கிறேன். இதற்கு முன்னர் இப்படி பார்த்தது கிடையாது. இது தான் எனக்கு புதிதாக இருக்கிறது. இங்கே  யாருக்குமே ஈகோ கிடையாது. கட்சி நல்லா இருந்தா போதும், கட்சியை வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நான் வளர்ந்தால் போதும் என்று யாரும் கிடையாது. கட்சி வளர்ந்தால் போதும் இது தான் எல்லாருடைய கொள்கையாக இருக்கிறது. பாஜவுக்கு எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லையே. சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் எனது பிரசாரம் தொடரும். அப்போது அங்கு எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். பொறுப்பாளராக போட்டு இருக்கிறார்கள். அந்த பணியை செய்து கொண்டு இருக்கிறேன்.

சென்னையை தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது என்ற ஒரு கருத்து நிலவி வருகிறதே? இப்போது எங்கே போனாலும் மோடி கட்சியில் தானே இருக்கிறீங்க என்று எல்லாரும் கேட்கிறாங்க. சென்னையை தாண்டி பாஜவை தெரியவில்லை என்றால். வேல் யாத்திரையில் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்திருக்க மாட்டோம்.அந்த அளவுக்கு எங்களுக்கு வெற்றி கிடைத்தது. திருப்பூராக இருக்கட்டும், ேகாவையாக இருக்கட்டும், கன்னியாகுமரியாக இருக்கட்டும் ஒவ்வொரு இடத்திற்கும் கூட்டம் இருக்கிறது. அவ்வளவு கூட்டம் காணப்படுகிறது. ஒரு காலத்தில் பாஜ இருக்குமா என்று அசால்டாக இருந்தார்கள். ஆனால், இன்று முதல் பக்கம் செய்தியில் பாஜ இருக்கிறது. அந்த அளவுக்கு பாஜவின் வளர்ச்சி இருக்கிறது.

Tags : Khushbu , Bjp, Seat, Actress Khushbu, Interview
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...