×

கவனமாக பேசுங்க சச்சின்: சரத்பவார் அட்வைஸ்

மும்பை: டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்த அமெரிக்க பிரபல பாப் பாடகி ரியான்னா கருத்துக்கு எதிராக இந்திய பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர். அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சச்சின் தெண்டுல்கரும் இவ்விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டிருந்தார். சச்சினின் டுவீட்களுக்கு எதிராக பலரும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், சச்சின் உருவ படத்திற்கு பழைய ஆயிலை ஊற்றி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் கவனமாக இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சரத் பவார் கூறுகையில், ‘விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் இந்தியப் பிரபலங்களின் நிலைப்பாடு குறித்து நிறைய பேர் கூர்மையாக எதிர்வினை ஆற்றியுள்ளனர். மற்ற துறைகள் குறித்து பேசும்போது சச்சின் டெண்டுல்கர் கவனமாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

Tags : Speak carefully Sachin: Sarabhavar Advice
× RELATED ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள...