×

கிருஷ்ணகிரி அருகே கன்டெய்னர் லாரியில் பயங்கர தீ ரூ.3 கோடி துணிகள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி: திருப்பூரில் இருந்து டெல்லிக்கு ரூ.3 கோடி மதிப்பிலான 150 பண்டல் துணிகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சவுகின் (27) என்பவர் ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையான காளிக்கோவில் அருகே லாரி வந்து கொண்டிருந்தது. அங்குள்ள துரைஏரி பேருந்து நிறுத்தம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு வந்தபோது, லாரியில் இருந்து புகை வருவதை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் பார்த்தனர். இதையடுத்து, லாரியை முந்தி சென்று ஓட்டுனரிடம் தகவல் கூறினர். உடனே டிரைவர் சவுகின், சாலையோரம் லாரியை நிறுத்தியபோது கன்டெய்னரில் இருந்து அதிகளவில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் துணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Krishnagiri , Krishnagiri, container truck, terrible fire
× RELATED மாவட்டத்தில் நடப்பாண்டு 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடநூல் விநியோகம்