ஐஎஸ்எல் கால்பந்து; ஐதராபாத்-கவுகாத்தி இன்று பலப்பரீட்சை: மாலை ஈஸ்ட்பெங்கால்-ஜாம்ஷெட்பூர் மோதல்

கோவா: 11 அணிகள் பங்கேற்றுள்ள 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று  நடந்த 84வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-கொல்கத்தா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா, அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் மன்விர் சிங் 11வது மற்றும் 54வது நிமிடத்திலும், ராய் கிருஷ்ணா 83, 86வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஒடிசா தரப்பில் கேப்டன் அலெக்சாண்டர் 45வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். முடிவில் 4.-1 என கொல்கத்தா வெற்றி பெற்றது. 15வது ஆட்டத்தில் கொல்கத்தா 9வது வெற்றியை பெற்றது. ஒடிசா அணிக்கு இது 9வது தோல்வி. இன்று மாலை 5 மணிக்கு ஜாம்ஷெட்பூர் -ஈஸ்ட் பெங்கால்,இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் எப்.சி.- கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.

Related Stories: