×

விருகம்பாக்கத்தில் நாளை காங். செயல்வீரர் கூட்டம்

சென்னை: விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.கே.ஆர்.மஹாலில், தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞருமான எம்.ஏ.முத்தழகன் ஏஐசிசி தலைமையில் மாபெரும் செயல் வீரர்கள் கூட்டம் நாளை திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் மூத்த தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

எனவே, அனைத்து காங்கிரஸ் நண்பர்கள், துணை அமைப்பு காங்கிரஸ் நண்பர்கள் கூட்டத்துக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்ட ஏற்பாடுகளை இல.பாஸ்கரன், ஏ.ஜோதிபொன்னம்பலம், திருவான்மியூர் எஸ்.மனோகரன், தி.நகர் என்.பால கிருஷ்ணன், சைதை பி.ஜி.செல்வகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Virugambakkam ,Activist meeting , Cong tomorrow at Virugambakkam. Activist meeting
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட...