×

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிப்பறையிலேயே திருநங்கைகளுக்கும் அனுமதி: பொதுமக்கள் அதிர்ச்சி

அறந்தாங்கி:அறந்தாங்கி நகராட்சி முதல்நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்தில் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, மேட்டுப்பாளையம், குமுளி, கோயம்புத்தூர், திருப்பூர், பழனி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், நாகர்கோவில், மதுரை, திருவாரூர், நாகப்பட்டினம், சாயல்குடி, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், பல கிராமங்களுக்கும் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்து நிலையத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக 2014ம் ஆண்டு அப்போதைய திமுக நகரசபை தலைவராக இருந்த மீனாள் இளங்கோவன் பதவி காலத்தில் ரூ.10 லட்சத்தில் நவீன கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறையில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனி அறையாக பிரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் பெண்கள் கழிப்பறையிலேயே திருநங்கைகளும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக இடம் ஒதுக்கியுள்ளனர். பெண்கள் கழிப்பறையின் வெளிப்புறம் பெண்கள் என்று எழுதப்பட்டுள்ள அறிவிப்பிற்கு கீழே மூன்றாம் பாலினத்தவர் கழிப்பறை என எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி நவீன கட்டண கழிப்பறையை தினம்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி அறைகள் தடுக்கப்பட்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பெண்கள் கழிப்பறையையே திருநங்கைகளும் பயன்படுத்தும் வகையில் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பெண்கள் கழிப்பறைக்குள் திருநங்கைகளும் செல்லும்போது பெண்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் பெண்கள் கழிப்பறைக்குள் இயற்கை உபாதை கழிக்க செல்லும் திருநங்கைகளுக்கும் அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம், திருநங்கைகளுக்கு தனியாக கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்றனர்.

Tags : women ,Aranthangi ,bus station , Aranthangi, at the bus station, in the women's toilet, transgender people are allowed
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு