×

மயிலாடுதுறை அருகே 15 ஆண்டுகளாக போடப்படாத சாலை: குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் அவதி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளுர் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் காலனி உள்ளது, இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் இருந்து பிரியும் சாலை காமராஜர் காலனி வழியாக சென்ற 1.5 கி.மீ தூரத்தில் பூம்புகார் கல்லணை சாலையில் இணைக்கிறது. மணல்மேடு பகுதி வழியாக செல்பவர்கள் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுத்த இந்த வழியாக செல்லலாம். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மாற்று சாலையாகவும் திகழ்கிறது. இப்பகுதியில் 300 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.

விவசாயத்துக்கான அனைத்து பொருட்களும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர், ஆர்டிஓ மற்றும் மயிலாடுதுறை ஒன்றியத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,Mayiladuthurai , Mayiladuthurai, 15 years, road, bomb,, people suffering
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி