×

இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கொல்கத்தா: இந்தியாவில் மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஹர்ஷ்வர்தன் கூறுகையில், “ அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகளை மட்டுமே இந்தியா சார்ந்து இருக்கப்போவது இல்லை. நமது நாட்டிலேயே மேலும் 7 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதேபோல், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வகை செய்யும் அளவில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Harshwardhan ,India , 7 more corona vaccines in India: Union Minister Harshwardhan
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!