×

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் 28ம் தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் மூலம் 21 செயற்கைகோள்களை வரும் 28ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி பிரேசில் நாட்டிற்கு சொந்தமான அமசோனியா-1 என்ற செயற்கைகோள்கள் உட்பட 21 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. காலை 10.23 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. மேலும், பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்டில் இஸ்ரோவின் ஐ.என்.எஸ் 2டிடி என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது. அமசோனியா-1 செயற்கைகோள் புவி கண்காணிப்பு மற்றும் காடுகள் பாதுகாப்பு, பிரேசில் நாட்டின் விவசாய மேலாண்மைக்கு உதவியாக இருக்கும்.

Tags : PSLV ,ISRO , PSLV C-51 rocket launches on 28th: ISRO
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு