உளறி விட வாய்ப்பு இருப்பதாக அச்சம் டிரம்புக்கு உளவு தகவல் பைடன் கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு அதிபர் பதவியில் இருந்து விலகிய போதிலும், சட்ட சம்பிரதாயப்படி அவருக்கும் உளவுப்பிரிவு ரகசிய தகவல்கள் வழங்கப்படும். இது, வழக்கமானது. ஆனால், டிரம்பின் பதவி காலம் முடிவதற்கு முந்தைய வாரத்தில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிட வன்முறை சம்பவத்துக்கு பிறகு, உளவுத் தகவல்களை டிரம்பிற்கு தெரியப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்று தேசிய தலைமை புலனாய்வு துணைத் தலைவராக இருந்த சூசன் கார்டன் கூறியுள்ளார். இந்நிலையில், அதிபர் பைடன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``டிரம்பிற்கு உளவுத் தகவல்கள் தெரிவிக்கப்பட தேவையில்லை என்று கருதியதால், அவற்றை தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். உளவு தகவல் தெரிந்தால் அவர் உளறி கொட்டி விட வாய்ப்புள்ளது,’’ என்றார்.

* டிரம்ப்பை நம்ப முடியாது

குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் சபை உளவுப்பிரிவுக்கான கமிட்டி தலைவர் ஆடம் ஸ்கிப் கூறுகையில், ``டிரம்ப் போன்றவர்களுக்கு உளவு தகவல்கள் தெரிவிக்க  வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இனிமேல் எப்போதும், டிரம்ப்பை நம்ப முடியாது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>