அஞ்சல்துறையின் மூலம் பக்தர்கள் இல்லத்திற்கே பழனி முருகன் கோயில் பிரசாதம் அனுப்பும் வசதி: அரசு உத்தரவு

சென்னை: பக்தர்கள் இல்லத்திற்கே பழனி முருகன் கோயில் பிரசாதம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறநிலையத்துறை செயலாளர் விக்ரம்கபூர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் கோயிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள பக்தர்கள் பயனடையும் வகையில் அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் மற்றும் இயற்கையாக தயார் செய்யும் விபூதி (10கிராம்), 6x4 அளவிலான தண்டாயுதபாணி சுவாமியின் ராஜ அலங்கார லேமினேடட் படம் (95 கிராம்) ஆகியவற்றை அஞ்சலக துறை நிர்ணயம் செய்த அஞ்சல் கட்டணம் ரூ.180 மற்றும் கோயிலுக்கு செலுத்த வேண்டிய பிரசாத கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.250ஆக நிர்ணயிதது அஞ்சலகத் துறை மூலம் இ-பேமேண்ட் வழியாக ரூ.250 கட்டணம் செலுத்தினால் பக்தர்கள் இல்லத்திற்கு சென்றடையும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>