×

சிட்டிஸ் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 336 கழிப்பறைகள் சீரமைப்பு

சென்னை: சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 336 கழிப்பறைகள் மேம்படுத்தபடவுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலக தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.95.25 கோடி. இதில் ரூ.76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும். இதன்படி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை ேமம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி சென்னையில் 46 மாநகராட்சி பள்ளிகள் சீரமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 2 பள்ளிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள 336 கழிப்பறைகளும் மேம்படுத்தபடவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 3511 கழிப்பறைகள் உள்ளது. இதில் 3171 கழிப்பறைகள் உள்ளது. 336 கழிப்பறைகள் சீரமைக்கப்படவுள்ளது. இவைகளும் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

Tags : Corporation schools , Renovation of 336 toilets in Corporation schools under the Cities project
× RELATED சிட்டீஸ் சிறப்பு திட்டத்தில்...