×

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கீழ்அம்பி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் வனிதா முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். போராட்ட தளங்களில் இணையதள சேவையை முடக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகள் மீதும் தலைவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதை தடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

இதில், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள் ராஜ், வட்டார தலைவர்கள் முருகேசன், தங்கராஜ், அசோகன், மாவட்ட துணை செயலாளர் கே.சி.பாபு மற்றும் பத்மநாபன், அருண், கோபால், நாதன், அன்பு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தில் மறியல் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நேரு தலைமையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறையை ரத்து செய்ய வேண்டும்.

போராடும் விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மீதான பொய்வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். டெல்லி மாநில எல்லைகளில் உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், காஞ்சிபுரம் தேரடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆடிசன்பேட்டை காமராஜர் சிலை வரை சென்ற விவசாயிகளை, விஷ்ணுகாஞ்சி போலீசார் தடுத்து நிறுத்தி, நிர்வாகிகள் சாரங்கன், லிங்கநாதன், பெருமாள், முருகேசன், மூர்த்தி, டில்லிபாய், சசிகலா, வசந்தா உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Demonstration ,parties ,Congress , Demonstration by Congress parties
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...