×

உண்மையான ஸ்லீப்பர் செல்கள் யாரு?

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு டிடிவி.தினகரன் தனித்துவிடப்பட்டார். அப்போது, அதிமுகவில் இருந்து ஏராளமானோர் தினகரன் பக்கம் சாய்ந்தனர். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு சென்றுவிட்டனர். தன்னை நம்பி வந்த எம்.எல்.ஏக்களையே டிடிவி.தினகரன் ஏமாற்றிவிட்டார் என அதிமுகவினரும் எள்ளி நகையாடினர். அப்போது, அதிமுகவில் உள்ள எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் தேவையான நேரத்தில் வெளியே வருவார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்தார். ஆனால், யார் ஸ்லீப்பர் செல்கள் என தெரியாமலேயே இருந்து வந்தது. தற்போது சசிகலா விடுதலையாகி வரும் 8ம் தேதி சென்னை திரும்பும் போது அந்த ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் தி.நகருக்கு படை எடுக்கும் என அமமுக வட்டாரங்கள் கூறுகிறது. இந்த ஸ்லீப்பர் செல் வரிசையில் சில அதிமுக எம்.எல்.ஏக்களும் இருப்பதாக கூறுவது கூடுதல் தகவல்.


Tags : Who are the real sleeper cells?
× RELATED சொல்லிட்டாங்க…