சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று மாலை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருந்த நிலையில் சந்திப்பு ரத்து என அறிவிப்பு

சென்னை: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாலை 4 மணி அளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்க இருந்தார். அந்த சந்திப்பு இறுதி நேரத்தில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான 20 சதவிகித உள்ஒதுக்கீடு தொடர்பாக தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் பாமகவின் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக இன்று மாலை சுமார் 4 மணி அளவில் முதல்வர் மற்றும் ராமதாஸ் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன் காரணமாக நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் அந்த பகுதியில் செய்தியை சேகரிப்பதற்காக கூடியிருந்தனர்.

ஆனால் இறுதி கட்ட நேரத்தில் இந்த சந்திப்பானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் இல்லத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் - ராமதாஸ் சந்திப்பு ரத்தானதை அடுத்து மாலை 6.30 மணிக்கு அமைச்சர்களுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்களுடன் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories:

>