×

H1B விசா வழங்குவதற்கு தற்போது பயன்படுத்தப்படும் நடைமுறையே 2021-ம் ஆண்டின் இறுதிவரை தொடரும்: அமெரிக்க நிர்வாகம் அறிவிப்பு

வாஷிங்டன்: H1B விசா வழங்குவதற்கு தற்போது பயன்படுத்தப்படும் நடைமுறையே 2021-ம் ஆண்டின் இறுதிவரை தொடரும் என அமெரிக்க அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தனது பதவியின் இறுதி காலத்தில் H1B விசா நடைமுறையில் குழுக்கள் முறையை மாற்றி விண்ணப்பிப்போரின் தகுதிக்கு ஏற்ப மதிப்பெண் அடிப்படையில் விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு எதிர் வரும் மார்ச் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.

இந்நிலையில் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் H1B விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமத படுத்துவதாக அறிவித்துள்ளது. H1B விசாவழங்குவதில் இந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை குழுக்கள் முறையே தொடரும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்தது வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு H1B விசா வழங்கப்படுகிறது. இதனை அதிக அளவில் இந்தியா மற்றும் சீனநாட்டினர் பெற்றுவருகின்றனர். ஒரு ஆண்டில் H1B விசா கோரி விண்ணப்பம் செய்யும் சுமார் 3 லட்சம் பேரில் குழுக்கள் முறையில் தகுதியுள்ள 90 ஆயிரம் பேருக்கு அமெரிக்க H1B விசாவழங்கிவருவது குறிப்பிடத்தக்களது.


Tags : administration ,US , The current practice for issuing H1B visas will continue until the end of 2021: US administration announces
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...