ஐபிஎல் முடிந்ததும் 2 வாரமாவது வீரர்களுக்கு ஓய்வு கொடுங்கப்பா?.. பிசிசிஐக்கு ரவிசாஸ்திரி வலியுறுத்தல்

சென்னை:  இந்திய கிரிக்கெட் அணி ஆண்டு முழுவதும் பிசியாகவே உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிரிக்கெட் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 5 மாதங்களுக்கு ஓய்வில் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர், அக்டோபரில்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் ஆடிய நிலையில், அங்கிருந்து நேராக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தனர். அங்கிருந்து நாடு திரும்பிய நிலையில் தற்போது இங்கிலாந்து தொடரில் ஆடி வருகின்றனர். இந்த தொடர் முடிந்தவுடன் ஏப்ரல், மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்கிறது. அதுமுடிந்த கையோடு ஜூன், ஜூலையில், இலங்கைக்கு எதிரான தொடர் மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் முடிந்ததும் சில வாரங்கள் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ஒரு கட்டத்தில் உங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு தேவை என்று நான் நம்புகிறேன். குவாரன்டைன்கள், பயோ பபள் முறைகள் மற்றும் தொடர்ந்து போட்டிகள் இந்திய வீரர்களுக்கு சோர்வை அளிக்கும் என்பதால் ஐபிஎல் 2021 தொடர் முடிந்தவுடன்அவர்களுக்கு 2 வாரங்களாவது  ஓய்வு அளிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் மனிதர்கள்தான். ஒவ்வொரு தொடரும் அதேபோல ஒவ்வொரு வடிவமும் மிகவும் முக்கியமானது . தற்போதைய வெற்றிக் கூட்டணி சிறப்பாக அமைந்துள்ளது. சிறப்பாக செயல்படுவதற்கான தாக்கம் அணியில் அதிகமாக உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>