திருவொற்றியூரில் வடிவுடையம்மன் கோயிலில் தமிழிசை சாமி தரிசனம்

திருவொற்றியூர்: தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கணவருடன், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல் பருவமாக, முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவு பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக காவல்துறை, துப்புரவு பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் போடப்பட உள்ளது. யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பாதுகாப்பற்ற தன்மையை உணர வேண்டாம். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதே. ஏற்கனவே, தொற்று பாதித்தவர்கள் நிச்சயம் போட்டு கொள்ள வேண்டும்.

தடுப்பூசியால் மீண்டும் பாதிப்பு ஏற்படாதா என்றால், பாதிப்பின் தன்மை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. உலகில் 2வது, 3வது அலை பாதிப்பு என்ற நிலையில், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசியால் பயம் வேண்டாம்’ என்றார்.

Related Stories:

>