×

‘ஆன்லைன் கேம்’ ஆடியதை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவன்

சேலம் : சேலத்தில் ‘ப்ரீ பயர் கேம்’ விளையாடிய மாணவன், பெற்றோர் திட்டியதால், வீட்டைவிட்டு வெளியேறினான். மாயமான மாணவனை போலீசார் விழுப்புரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சமூக வலைதளங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகளை கவர்ந்திழுக்கும் ஏராளமான கேம்கள் உள்ளன. அதில் புளூவேல் என்ற கேமுக்கு மாணவ, மாணவிகள் இடையே பெரும் வரவேற்பு இருந்தது. இந்த விளையாட்டை விளையாடிய மாணவ, மாணவிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு இருந்தது.

இந்த கேமுக்கு அரசு தடைவிதித்தது. இதன்பின்னர் பப்ஜி என்ற கேம் வந்தது. இந்த கேம் விளையாடிய பலர் தற்கொலைக்கு முயன்றனர். இதையும் அரசு தடை செய்தது. தற்போது ப்ரீ பயர் கேம் என்ற விளையாட்டு மாணவ, மாணவிகளிடையே பிரபலமாகி வருகிறது. பலர் செல்போனில் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி உள்ளனர்.

இந்த வகையில் சேலம் கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் இந்த கேமுக்கு அடிமையாகி உள்ளான். தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் ஆன்லைன் வகுப்பு படிப்பதாக பெற்ேறாரிடம் கூறிவிட்டு, செல்போனில் ப்ரீ பயர் கேம் விளையாடி வந்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் மாணவனை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினமும் மாணவன் மீண்டும் ப்ரீ பயர் கேம் விளையாடினான்ர். அப்போதும்  பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் வேதனையடைந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவனை பெற்ேறார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். கிடைக்காததால், இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் வந்தது. அதில் பேசிய போலீசார் கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டமங்கலத்தை சேர்ந்த 13வயது சிறுவன் விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் உள்ளான் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் நேற்றுமுன்தினம் இரவு விழுப்பும் சென்றனர். அங்கு மாணவனை மீட்டு, நேற்று அதிகாலை சேலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அறிவுரை கூறி, அவனை பெற்றோரிடம், ஒப்படைத்தனர்.

Tags : schoolboy ,home , Online game, salem, vilpuram,free fire game
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...