வன்னியர் இட ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமியை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

சென்னை: முதல்வர் பழனிசாமியை இன்று மாலை 4 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திக்கவுள்ளார். பாமக நிர்வாகிகளுடன் கடந்த சில தினங்களாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று முதல்வரை ராம்தாஸ் சந்திக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வருடன் ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். வன்னியர்களுக்கான 20% உள்ஒதுக்கீடு, கூட்டணி தொடர்பாக முதலமைச்சருடன் ராமதாஸ் பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>