
சென்னை: சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சசிகலா நாளை மறுநாள் சென்னை வரவுள்ள நிலையில் சென்னையில் பேரணி குறித்து காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். பெங்களூரிலிருந்து சென்னை வரும் சசிகலா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து பேரணியாக வருவதை தடுக்கவும் நடவடிக்கை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.