×

தற்கொலை செய்த டிவி நடிகை சித்ராவின் நகம் ஆய்வு முடிவுஒரு வாரத்தில் தெரிந்துவிடும்: ஐகோர்ட்டில் குற்றப்பிரிவு தகவல்

சென்னை: தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ராவின் நகங்கள் ஆய்வு முடிவு ஒரு வாரத்தில் தெரியவரும் என்றும்  சென்னை மத்திய குற்றப்பிரிவு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்  சித்ராவின்  கணவர் ஹேம்நாத்தை கடந்த டிசம்பர் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர். இவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா பட்டுப்புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், நடிகை சித்ராவின் நடத்தையில் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது தொலைபேசி உரையாடல்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைகள், வரும் 10ம் தேதி வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.  இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கை பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.




Tags : Chitra ,nail test ,suicide , TV actress committed suicide in the week will be mutivuoru review Chitra's claw: High Court Criminal Information
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?