போரூரில் 7ம் தேதி தேர்தல் பிரசாரம்: முதல்வர் எடப்பாடிக்கு பிரமாண்ட வரவேற்பு: அமைச்சர் பென்ஜமின் ஏற்பாடு

திருவள்ளூர்: போரூரில் 7ம் தேதி காலை 9 மணிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க திருவள்ளூர் மத்திய மாவட்ட  அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கா.சு.ஜனார்த்தனன், மணிமேகலை தேவேந்திரன், புலவர் ரோஜா, சி.வை.ஜாவித் அகமத், பி.ஜெயபால், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் ரா.மணிமாறன், செவ்வை எம்.சம்பத்குமார், பேரழகன், கேஜிடி.கௌதமன், புட்லூர் ஆர்.சந்திரசேகர், கே.எஸ்.ரவிசந்திரன், டி.எம்.ரமேஷ், மதுரவாயல் ஏ.தேவதாஸ், என்.எம்.இம்மானுவேல், கே.தாமோதரன், இ.கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், மத்திய மாவட்ட செயலாளரும், ஊரக தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் பேசியதாவது, “சட்டமன்ற தேர்தல் பிரசாரம் போரூரில் வரும் 7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றி வாக்குகளை சேகரிக்க உள்ளார். போரூர் வருகை தரும் முதல்வருக்கு மதுரவாயல், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக கலந்துகொண்டு வரவேற்பு அளிக்க வேண்டும்” என்றார்.

Related Stories: