×

அங்கே யாருப்பா லீடிங்...? அப்போ அவங்க ஆட்சி தான்...!இப்படியும் ஒரு சென்டிமெண்ட்

தேர்தலில் பெரும்பான்மை கிடைச்சால்தான் ஆட்சியை பிடிக்க முடியும். அதுதான் பொது விதி. ஆனால், சில சென்டிமென்ட்களும் தேர்தலில் தொடர்கிறது. குறிப்பிட்ட ஒரு தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சி ஆட்சியை பிடித்து விடும். அந்த வகையில், ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி ெபறும் கட்சியே, கடந்த சில தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்து வருகிறது. இது சென்டிமென்டா? இல்லை... மக்களின் மனநிலை புரிந்து நடக்கிறதா என்பது வாக்காளர்களுக்கே வெளிச்சம். கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் தொகுதியின் தேர்தல் நிலவரத்தை பார்ப்போமா? முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் 1989ல் நடந்த தேர்தலில் எம்எஸ்கே.ராஜேந்திரன் (திமுக) இங்கு வெற்றி பெற்றார். அப்போது தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1991 தேர்தலில் தென்னவன் (அதிமுக) வெற்றி பெற்று அமைச்சரானார். ஜெயலலிதா முதல்வரானார். 1996 தேர்தலில் ரகுமான்கான் (திமுக) வெற்றி பெற்று அமைச்சரானார். திமுக ஆட்சியை பிடித்தது. 2001ல் அன்வர்ராஜா (அதிமுக) வென்று அமைச்சரானார். மீண்டும் அதிமுக ஆட்சி. 2006 தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஹசன்அலி எம்எல்ஏ ஆனார். திமுக ஆட்சியை பிடித்தது. 2011 தேர்தலில் அதிமுக ஆதரவு பெற்ற மமக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆனார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி. கடந்த 2016 தேர்தலில் மணிகண்டன் (அதிமுக) வெற்றி பெற்றார். அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆச்சரியமா இருக்குல்ல... முதல்வரை நிர்ணயிக்கும் தொகுதி என்பதால் ராமநாதபுரம் தேர்தல் கணிப்பை, முன்னணி நிலவரத்தை அறிவதில் தொண்டர்களிடையே இப்போதே ஆர்வம் கரை புரண்டு ஓடுகிறதாம்.



Tags : Europe , Is Europe leading there ...? That is his rule ...! Such a sentiment
× RELATED அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா...