×

தனியார் பள்ளி, கல்லூரிகளின் நிதி பரிவர்த்தனையை அரசு கருவூலம் மூலம் மேற்கொள்ள முடியாது: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறதா  என்பதை கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லை என்பதால், தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை, அரசு கருவூலம் மூலம் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த  மனுவில், மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை கண்காணிக்காததால் 50 சதவீத லாபம் பள்ளி மற்றும் கல்லூரி அறங்காவலர்களின் கைகளுக்கு செல்கிறது. தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு எந்த கட்டணச்சலுகையும் வழங்கப்படுவதில்லை.

எனவே, தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான  வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தனியார் கல்வி நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை அரசு கருவூலம் மேற்கொள்வது என்பது அரசின் கொள்கை முடிவு. இது சம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேசமயம், கட்டண விகிதங்களை குறைப்பது தொடர்பாக மனுதாரர், சம்பந்தப்பட்ட அரசுத்துறைக்கு மனு அளிக்கலாம். அதை அரசு பரிசீலிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : schools ,colleges , Private schools and colleges of the financial transactions carried out by the state treasury will not: HC orders action
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...