×

பாஜவினர் சுய தம்பட்டம் பலிக்காது 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்

ஆறுமுகநேரி, மார்ச் 14: பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு  வெற்றிபெறும் என்று ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார். ஆத்தூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அமலிராஜன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன், விவசாய அணி இணை செயலாளர் மணி, நகர செயலாளர்கள் காயல் மவுலானா, திருச்செந்தூர் மகேந்திரன், ஆறுமுகநேரி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக் சுப்பையா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது: இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களின் ஆதரவோடு விரைவில் பொதுச்செயலாளர் ஆவார். அவருக்கு 2600 பொதுக்குழு உறுப்பினர்களில் 2500 பேரும், 65 எம்எல்ஏக்களில் 61 பேரும், 76 மாவட்ட செயலாளர்களில் 71 பேரும் ஆதரவாக உள்ளனர். அவர் அதிமுகவை துணிச்சலாக வழிநடத்தி செல்வதால் மக்கள் அவரை அதிமுகவின் 3வது மிகப்பெரிய தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறுமென அவர்களே சுய தம்பட்டமாக சொல்லிக் கொள்கின்றனர். அது பலிக்காது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும், என்றார். தொடர்ந்து பெண்களுக்கு இலவச சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆத்தூர் கவுன்சிலர் சிவா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மீனவரணி துணை தலைவர் எரோமியாஸ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி சுந்தர், வை. மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், முக்காணி கணேசன், ஒன்றிய மகளிரணி செயலாளர் ஜூலியட் ரவிசங்கர், கீரனூர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் நகர செயலாளர் சோமசுந்தரம் நன்றி கூறினார்….

The post பாஜவினர் சுய தம்பட்டம் பலிக்காது 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Arumukaneri ,Attur ,
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி