டிரம்ப் வழியில் ஜோ பைடன்: ஏமனில் சவுதி ராணுவப் படைகளுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அறிவிப்பு.!!!

வாஷிங்டன்: பிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்த கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உலகளவில் பொருளாதாரதம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா முன்னோடியாக திகழ்கிறது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர்களிலும் தங்கள் பங்களிப்பை அமெரிக்கா வழங்கி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் 45-வது அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தனது ஆட்சி காலத்தில், இராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறப்பட்டது.

இதனைபோல், தற்போது, அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் நிர்வாகவும் இந்த வழியில் செல்ல தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஏமனில் சவுதி ராணுவப் படைகளுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ஏமனில் நடக்கும் போர் முடிவுக்கு வர வேண்டும். ஏமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்த அனைத்து ஆதரவுகளும் திரும்பப் பெறப்படுகின்றன. இதில் ஆயுத விநியோகமும் அடங்கும் என்று தெரிவித்தார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>