தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை சரிவு: சவரன் ரூ.35528க்கு விற்பனை..இல்லத்தரசிகள் மகிழச்சி.!!!

சென்னை: தங்கம் விலை இன்று காலை 4வது நாளாக சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து பவுன் ரூ.35,528க்கு விற்பனையானது. மத்திய அரசின் பட்ெஜட் கடந்த 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கத்திற்கான இறக்குமதி வரி  இரண்டரை சதவீதமாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று மாலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.36,520க்கும் விற்கப்பட்டது. 3ம் தேதி பவுனுக்கு ரூ.288 குறைந்து ஒரு பவுன் ரூ.36,232க்கும் விற்கப்பட்டது.  நேற்று பவுனுக்கு ரூ.368 குறைந்து ஒரு பவுன் ரூ.35,864க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 3 நாட்களில் பவுன் ரூ.1,136 அளவுக்கு குறைந்தது.

இந்த நிலையில் இன்று காலை 4வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.42 குறைந்து ஒரு கிராம் ரூ.4,441க்கும், பவுனுக்கு ரூ.336 குறைந்து, ஒரு பவுன் ரூ.35,528க்கும் விற்கப்பட்டது. இன்று காலையுடன் சேர்த்து 4  நாட்களில் மட்டும் தொடர்ச்சியாக பவுனுக்கு ரூ.1472 அளவுக்கு குறைந்துள்ளது. இந்த மாதங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை குறைவு நகை வாங்குவோருக்கு கூடுதல்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து வருவதாகவும் நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>