×

பனிப்பொழிவு காரணமாக கோழிக் கொண்டை பூக்கள் பாதிப்பு

சிங்கம்புணரி, மார்ச் 14: சிங்கம்புணரி அருகே பிரான்மலை பகுதியில் அதிகளவில் கோழி கொண்டை பூ, செவ்வந்தி, அரளி மற்றும் துளசி போன்றவற்றை பயிரிட்டு வருமானம் பார்த்து வருகின்றனர். இக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பூக்களை கட்டி, சிங்கம்புணரி பொன்னமராவதி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.பூக்கள் தேவைக்காக தோட்டத்தில் பலவகையான பூக்களை பயிரிட்டும் வருகின்றனர்.தற்போது இரவு முதல் காலை 9 மணி வரை பிரான்மலை பகுதியில் பனிமூட்டம் நிலவுவதாலும் மதிய நேரங்களில் அதிக வெயில் காரணமாகவும் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் போதிய விளைச்சல் இன்றி வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகன் கூறும்போது, இங்கு பூக்கட்டும் தொழிலாளர்கள் பூக்களை கட்டி திருவிழாக்கள் மற்றும் வீடுகள் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றோம். தற்போது பனி அதிகம் காரணமாக பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பூக்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றார்….

The post பனிப்பொழிவு காரணமாக கோழிக் கொண்டை பூக்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Branmalai ,Dinakaran ,
× RELATED மது விற்றவர் கைது