ஐஎஸ்எல் கால்பந்தில் இன்று மோதல்: பெங்களூருவை பழிதீர்க்குமா சென்னையின் எப்சி?

கோவா: 7 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82வது லீக் போட்டியில் எப்.சி. கோவா-காவுகாத்தி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில், கோவா வீரர் ஜேசுராஜ் 21, அமர்ஜித்சிங் 80வது நிமிடத்தில் கோல் அடித்தனர். கவுகாத்தி தரப்பில் காலேகோ 41, மற்றும் 83வது நிமிடத்தில்கோல் அடித்தார். இதனால் போட்டி 2-2 என சமனில் முடிந்தது.15வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7வது டிராவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எப்.சி- சென்னையின் எப்.சி அணிகள் மோதுகின்றன.

சென்னை 15 போட்டியில் 3 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி என 16 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், பெங்களூரு 15 போட்டியில் 4 வெற்றி, 6 டிரா, 5 தோல்வி என 18 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், பெங்களூரு 4, சென்னை 3 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ள. நடப்பு சீசனில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மோதிய போட்டியில் பெங்களூரு 1-0 என வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க சென்னையின் எப்சி போராடும்.

Related Stories:

>