15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத இடங்கண்ணி கிராமம்

தா.பழூர் :அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ளது இடங்கண்ணி கிராமம். இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இடம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 2005-2006ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 75 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

அதுபோல 2007-2008ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மனை இல்லா பயனாளிகள் 75 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.ஆனால் தற்பொழுது வரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த இலவச வீட்டு மனை பட்டா பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்கு சாலை வசதி என்பது இல்லை.

இந்த பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் சாலையின் இரண்டு பகுதிகளிலும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.

மேலும் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் தண்ணீர் சாலையிலேயே தேங்கி சேறும் சகதியுமாய் கிடைக்கின்றன. இதனால் சேற்றில் வழுக்கி விழும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>