×

திண்டுக்கல்லில் பயனின்றி கிடக்கும் பயணியர் நிழற்குடை-மக்கள் வரிப்பணம் வீண்

திண்டுக்கல் :  திண்டுக்கல் ரவுண்ட் ரோடு வழியாக சிலுவத்தூர் செல்லும் சாலையில் சட்டமன்ற தொகுதி நிதி ரூ.7.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு, கடந்த 2018ல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் திண்டுக்கல்- சிலுவத்தூர் இடையே ரயில்வே கேட் இருப்பதால் அதற்கு மேம்பால பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது வரை பால பணிகள் முடியாமல் ஆமைவேகத்தில் நடந்து வருகிறது.

இதனால் சிலுவத்தூர் செல்லும் பஸ்கள் திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலம், மாலப்பட்டி வழியாக செல்கின்றன. பஸ்கள் செல்லாததால் இப்பயணியர் நிழற்குடை தற்போது மது குடிப்பவர்களுக்கும், சுற்றி திரிபவர்களுக்கும் உறங்கு் இடமாக உள்ளது. மக்களின் வரியில் இருந்து வளர்ச்சி நிதியாக வழங்கப்படும் பணத்தில் மக்களின் பயனுக்காக செலவிடாமல் காட்சிபொருளாக கட்டி வீணடித்துள்ளனர் என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : traveler ,Dindigul - People , Dindigul: A passenger canopy has been constructed on the road leading to Chiluvathur via Dindigul Round Road at a cost of Rs 7.5 lakh.
× RELATED தமிழக சிபிசிஐடி போலீசார் பயன்படுத்திய ஜீப், டெம்போ டிராவலர் ஏலம்