திண்டுக்கல்: ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணை பொது செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் தனது இல்லத்தில் ஆத்தூர் தொகுதி மக்களிடமி ருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கியபடி இருந்தார். அப்போது ஆத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளார் பிள்ளையார் நத்தம் முருகேசன் தலைமையில் முன்னிலைக்கோட்டை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணியம்மாள், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், ஆத்தூர் ஒன்றிய மாணவரணி செயலாளருமான அலெக்ஸ் மற்றும் ஆரியநல்லூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். ெதாடர்ந்து அமைச்சர், திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து விட்டு அவர்கள் மத்தியில் பேசியதாவது, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நல்லாட்சியால் மாற்று கட்சியை சேர்ந்த பலரும் மாநிலம் முழுவதுமிருந்து தாய் கழகமான திமுகவில் இணைந்து வருகின்றனர். திமுகவில் இணைந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்….
The post திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர் appeared first on Dinakaran. | திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர் | Dinakaran
×
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்
02:26 am Mar 13, 2023 |
Tags : AIADMK ,DMK ,Minister ,I. Periyasamy ,Dindigul ,State Deputy General Secretary ,Rural Development ,I.Periyaswamy ,Athur Constituency ,Aathur ,DMK East Union ,Pillayar Natham Murugesan ,Panchayat Council ,President ,Antoniyammal ,Aathur Union ,Student Secretary ,Alex ,Ariyanallur ,Dravida model government ,Chief Minister ,Tamil ,Nadu ,M.K. ,Dinakaran ,