×

காரைக்காலில் 2,250 மாணவர்கள் பிளஸ்2 தேர்வு எழுதினர்

காரைக்கால்,மார்ச் 14: காரைக்காலில் 2,250 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் முகமது மன்சூர் ஆய்வு செய்தார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கியது. காரைக்கால் மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காரைக்காலில் 10 அரசு பள்ளி மற்றும் 15 தனியார் பள்ளிகள் சேர்ந்த மொத்தம் 2250 பேர் தேர்வு எழுதினர். மேலும் இவ்வாண்டு தனி தேர்வர்களாக 84 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு பணியில் 10 முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 துறை அலுவலர்கள், என மொத்தம் 8 பறக்கும் படையினர் தேர்வு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் 11 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எழுதி உள்ளனர்.இதில் ஆறு மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக ஆறு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், நெடுங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.நேற்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ் தாள் தேர்வுக்கு 147 பேர் வரவில்லை. மேலும் இன்று மேல்நிலை முதலாம் ஆண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. இதில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 2233 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் இவ்வாண்டு 49 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post காரைக்காலில் 2,250 மாணவர்கள் பிளஸ்2 தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Mohammad Mansoor ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...